பொறிப்பயிர் சாகுபடி

பொறிப்பயிர் சாகுபடி செய்தல் அவசியம்

பயிர் சாகுபடியின் பொழுது சில வகைப்பயிர்களை ஊடுபயிர்களாகவும் (Inter Crop)  வரப்பு பயிர்களாகவும் (Border  Crop) சாகுபடி செய்வதன் மூலம் பூச்சிகளின் தாக்குதல்களை குறைக்கலாம்.

உதாரணமாக காய்கறி சாகுபடி செய்யும் நிலங்களில் வெங்காயம், வெள்ளைப்பூண்டு, கொத்தமல்லி போன்ற பயிர்களை சாகுபடி செய்தால் அந்த ஊடுபயிர்களில் இருந்து வெளிவரும் வாசனை காய்கறி செடிகளைத் தாக்கவரும் பூச்சிகளை விரட்டி விடும்.

கடலை  பயிரிடும் நிலங்களில் சூரியகாந்தியை ஊடுபயிராக பயிரிடலாம்.

துவரை சாகுபடி செய்யும் நிலங்களில் ஊடுபயிராக சோளம், கம்பு செவ்வந்தி பயிரிடலாம். இவ்வாறு ஊடுபயிர் சாகுபடி செய்வதால் துவரையைத் தாக்கும் காய்துளைப்பான், புழுவின் தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

மேற்க்கண்ட ஊடுபயிர்களில் பெண் பூச்சிகள் முட்டைகளை இடும். இந்த முட்டைகளை சேகரித்து அழித்து விடலாம்.

வெண்டைப் பயிரில் ஊடுபயிராக பாகற்கொடி பயிர் செய்து வெண்டையை தாக்கும் பூச்சிகளின் தாக்குதலை குறைக்கலாம்.

ஆமணக்கு பயிரை வரப்போரப் பயிராக சாகுபடி செய்வதன் மூலமாக சாகுபடி நிலங்களில் பூச்சி தாக்குதலை குறைக்கலாம்.

செவ்வந்தி( Marigold)  ஊடுபயிராகவும் வரப்புப் பயிராகவும் சாகுபடி செய்வதன் மூலம் நூற்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.

வரப்புப் பயிர்களாக சோளம், கம்பு, மக்காச்சோளம் ஆகியவற்றை மிக நெருக்கமாக விதைப்பதால் அடுத்த வயல்களில் இருந்து வரும் பூச்சிகள் கட்டுப்படுத்தலாம்.

Comments

Popular posts from this blog

Soil Science

Agricultural Statistics

Agronomy