பல்லுயிர் வேளாண்மை

பூச்சிவிரட்டியை தவிர்த்து பல்லுயிர் வேளாண்மை நோக்கி நகர்வோம்  :::::

பூச்சி விரட்டி என்பது தற்காலிக தீர்வே...
பல பயிர் சாகுபடி செய்து பறவைகளுக்கான உணவை உறுதி செய்வோம்...

அவைகள் கண்டிப்பாக நமக்கான உணவை இயற்கையிடம் இருந்து பெற்றுத்தரும். பூச்சி விரட்டி அடித்து பூச்சிகளை விரட்டும்போது..
 அனைத்து பல்லுயிர்களுமே விரட்டப்படும்...
 அப்படி என்றால் இது எப்படி இயற்கை வழி சங்கிலியை நிலைநிறுத்தும். பூச்சி விரட்டி அடித்தால் உண்மையில் எந்த பூச்சும் சாவதில்லை எனக்கூறமுடியுமா.உண்மையில் இறக்கின்றது என்பதே உண்மை.. கண்டிப்பாக ஏதோ ஒரு இனம் மலட்டுத்தன்மை அடைந்து கொண்டுதான் இருக்கின்றது. நாளை விதைகளை தூவும் காகமாக கூட இருக்கலாம் ...

மறக்காதீர்.

பூச்சி விரட்டி அடிக்கவில்லை என்றால் மனித இனத்திற்கு உணவு பற்றாக்குறையை எப்படி தீர்ப்பது என்றால்.அது நம் வேலை அல்ல...
பல்லுயிர்களின் வேலை மற்றும் வேளாண்மை.. நம்மை விட அது இயல்பாக இயற்கையாகவே செய்யும். தென்னை மரத்தை மட்டும் வைத்துவிட்டு வண்டுகளை  பொறிவைத்து அழிக்காதீர்..
இங்கே அனைத்து உயிர்களும் ஏதோ ஒர் பல்லுயிர் சுழற்சிக்கு உணவு என்பதை மறக்காதீர்.தோப்புக்கு பதில் காடுகளாக மாற்றுங்கள்.

வெறும் தென்னை தோப்பை வைத்துக்கொண்டு ...

 வண்டு வருகிறது என்றால்... அதற்கான பல்லுயிர் உணவு சுழற்சியை தடுத்துவிட்டு...

உணவுக்காக எங்கே போகும்.. குறுத்துக்குதான் போகும்..

மறைவிடத்தை நோக்கித்தான் போகும்.

காடுகளில் மக்கு கழிவுகளாக இலைகள்,சறுகுகள் இருப்பதால் அங்கே எளிதாக மறைவிடத்தில் புதருக்குள், மண்ணுக்குள் முட்டையிட்டு பாதுகாக்கும்..

ஆனால், நாமோ சுத்தமாக வைத்திருக்கும் தென்னந்தோப்பில் வண்டு வருகிறது என பல வேளாண்மை அக்ரிகள் கூறும் பொறிகளை வாங்கி வண்டுகள் இனத்தை அழிக்கின்றோம்

இயற்கை எந்த ஒரு உயிரையும் காரணமின்றி உருவாக்கவில்லை..என்பதை உணராத வரை.. யாரும் இயற்கை வழி வேளாண்மை செய்யவில்லை என்பதை    ஒப்புக்  கொள்ளுங்கள்.

பறவைகளை தோப்புகளுக்கு வர சிறு உயிர்களை வருமாறு தோப்பை மாற்றுங்கள்.. குறு பழ மரங்களை ஊடுபயிறாக நடுவோம்... வணிகத்திற்காக அல்ல... தென்னையின் பாதுகாப்பிற்காக.

தென்னந்தோப்புகள் சுத்தமாக உழது.. பெருக்கி வைத்திருப்போரை என்ன சொல்ல... பறவைக்கூடுகளுக்கு பதில் பொறிவண்டு கூண்டுகள் தொங்குகின்றது.

நன்மை செய்யும் பூச்சிகள் வரவேண்டும் தோட்டத்திற்கு;

செண்டுமல்லி மல்லிகை நாட்டு ரோஜா மரமல்லி பவளமல்லி முல்லை சாமந்தி செண்பகம் போன்ற மலர் செடிகள் நிறைய வேண்டும் பூச்சிகளை இழுக்க;

பழ மரங்கள் அத்தி நாவல் போன்றவை வேண்டும் வௌவால்கள் வரவழைக்க ;

பெரிய இலைகள் கிளைகள் கொண்ட மரங்கள் வேண்டும் பறவைகள் வந்து தங்க;

உயிர்வேலி இட்டேரி வேண்டும் சிறு சிறு விலங்குகள் வந்து தங்க;

அங்குதான் உயிர்ச்சுழல் நிலவும்; உணவு சங்கிலி நிலைபெறும்; அணைத்து உயிர் பெருக்கமும் கட்டுக்குள் வரும்;

அங்கு பூச்சி விரட்டி தேவை இல்லை;

பறவைகள் எழுப்பும் இசை சுடர்வனத்தில் :,

Comments

Popular posts from this blog

Soil Science

Agricultural Statistics

Agronomy