இலக்கியங்களில் நீர்

                      இலக்கியங்களில் நீர்


ஐந்துபூதங்களின் அவசியத்தைப் பின்வரும் புறநானூற்றுப் பாடல் சொல்கிறது:

மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலை இய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல

இப்பாடல் ஐம்பூதங்களும் மானுடத்தின் தேவைக்குப் பயன்படவேண்டும் என்கிறது.

நிலம் என்பது உடம்பு. நீர் என்பது உயிர்.
நிலம் எனப்படும் உடம்பு அழியாமல் காக்கப்பட வேண்டுமாயின், நீர்நிலைகளான உயிரைப்பேணவேண்டும் என்று பழந்தமிழர் உணர்ந்திருந்தனர்.

நீரான் வீறு எய்தும் விளைநிலம்” என நீருள்ள நிலமே சிறப்புடையது, பெருமையுடையது என நான்மணிக்கடிகை கூறுகிறது.

தீமுரணிய நீரும்‘ என்ற புறநானூற்றுப் பாடல் நீர் நிலைகளைப் பெருக்கினால் புவி வெப்பமடைவதிலிருந்து தப்பிக்கலாம் என்கிறது.

நீரைத் தேக்கும் வழிகள் பற்றிய குறிப்புகளும் தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன.

நீரின் இயல்பானது ‘குழித்துழி நிற்பது‘ (நாலடியார்.31) என்பதால், அந்நீரை குழிகள் (குளம்) அமைத்துத்தேக்க வேண்டும்.

`நீரான் அறிப மடுவினை‘ (நான்.80) என்ற பாடல் குளம் அமைத்து தேக்கும் நீர் ஒரு ஆறு உள் அடங்கும் அளவிற்கு இருக்கவேண்டும். (நான்.54) என்றும் நீரைக் காக்க வேண்டிய வழிமுறைகளைக் கூறுகிறது.

இதன் மூலம் பழந்தமிழர்,குளம் தொட்டு வளம் பெருக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனார் என்பது புலனாகுகிறது.

குளம் பற்றிய பிற சங்க இலக்கிய குறிப்புகள்:
நிலன்நெளி மருங்கில் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம, இவண் தட்டோரே“ (புறம்.18.27)

மடு, குளம் (பெரும்.288,மதுரை.710,குறுஞ்சி.63,மலைபடு.47)

“அறையும்பொறையும் மணந்தலைய எண்நாள் திங்கள் அனைய கொடுங்கரை தெண்ணீர்ச்சிறுகுளம்....”(புறம்.118)

(இப்பாடல் எட்டாம்நாள் தோன்றும் பிறை போன்ற வளைந்த தோற்றுமுடையகரையுடைய குளம்கட்டப்பட்டு வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்டதைப் பற்றிக் கூறுகிறது.)

‘நீர்அறம் நன்று நிழல்
நன்று‘(சிறுபஞசமூலம்.61)

• ”குளம்தொட்டு காவு”(சோலை) - (பதிற்றுப்பத்து 64)

• ‘காவோடு அறக்குளம் தொட்டல் மிக இனிது‘
 (குளம் அமைப்பதோடு சோலைகளை அமைப்பது அறச்செயல் என்கிறது இனியவை நாற்பது.

முக்கிய குறிப்பு ::::

வீடு கட்ட வைத்திருக்கும் அல்ல தரிசு நிலங்களை குழி அமைத்து சரிவான வரப்பு அமைத்து நீர்நிலையை பெறுக்குவோம்...

நிலத்தடி நீரை உயர்த்துவோம்.
பின் வீடு கட்டும்போது நீர் தேவைக்கு கிணறு வெட்டி ஊற்றை உறுதி செய்வோம்.

ஆழ்துளை கிணற்றை தவிர்ப்போம்.

நஞ்சை, புஞ்சையில் அனைத்திலும் நீர் கட்டமைப்பு வரப்பு உயர்த்தி பஞ்சபூதங்களை நிலை கொள் செய்வோம்.

பல்லுயிர் சூழலுக்கு நீர் கட்டமைப்புக்கு வரப்பு உயர்த்தி வேளாண்மை செயவோம்

Comments

Popular posts from this blog

Soil Science

Agricultural Statistics

Agronomy